புகையிலைக்கு தடை!! – நியூசிலாந்து அதிரடி

Flag of New Zealand.svg 1

நியூசிலாந்தின் எதிர்கால தலைமுறையினர் புகையிலை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு, அதற்கான சட்டம் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் இன்று (13) நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய புகைபிடித்தலுக்கு எதிரான சட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக, 2009 ஜனவரி 1 அல்லது அதற்குப் பின்னர் பிறந்த எவருக்கும் புகையிலை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விற்பனை செய்வோருக்கு 150 ஆயிரம் நியூசிலாந்து டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டம் புகைக்கும் புகையிலை பொருட்களில் அனுமதிக்கப்பட்ட நிகோட்டின் அளவையும் குறைக்கும் என்பதுடன், புகையிலை விற்கக்கூடிய சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை 90% ஆல் குறைக்கும் என்று அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#world

Exit mobile version