OIP 8
உலகம்செய்திகள்

மனிதக் கழிவிலிருந்து விமான எரிபொருள்: பிரித்தானிய அறிவியலாளர்கள் சாதனை

Share

மனிதக் கழிவிலிருந்து விமான எரிபொருளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்கள் பிரித்தானிய அறிவியலாளர்கள் சிலர்.

பிரித்தானிய விமான நிறுவனம் ஒன்று, மனிதக் கழிவிலிருந்து விமான எரிபொருள் ஒன்றை உருவாக்கியுள்ளது. Gloucestershireஇல் அமைந்துள்ள ஆய்வகம் ஒன்றில் அறிவியலாளர்கள் மனிதக் கழிவிலிருந்து விமானங்களை இயக்க உதவும் மண்ணெண்ணெயை உருவாக்கியுள்ளார்கள்.

Firefly Green Fuels என்னும் அந்த நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியான ஜேம்ஸ் (James Hygate), எளிதில், அதிகம் கிடைக்கும் ஒரு கச்சாப்பொருளிலிருந்து எரிபொருள் ஒன்றை உருவாக்க விரும்பினோம், மனிதக் கழிவுதான் எக்கச்சக்கமாக கிடைக்கிறதே, அதையே பயன்படுத்தி எரிபொருளை உருவாக்க திட்டமிட்டோம் என்கிறார்.

லண்டன் இம்பீரியல் கல்லூரி அறிவியலாளரான Dr செர்கியோ லிமா (Dr Sergio Lima) என்பவருடன் இணைந்து எரிபொருளை உருவாக்கும் முயற்சிகளைத் துவங்கியுள்ளார் ஜேம்ஸ். லிமாவும் Firefly Green Fuels நிறுவனத்தில் ஆய்வு இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

மனிதக் கழிவிலிருந்து உருவாக்கப்பட்ட மண்ணெண்ணெயை பரிசோதித்தபோது, அது அப்படியே மண்ணெண்ணெயைப் போல செயல்பட்டதுமட்டுமல்ல, சாதாரண விமான எரிபொருளைவிட அது 90 சதவிகிதம் குறைவான கார்பன் வாயுக்களையே வெளியேற்றியதும் ஆச்சரியத்தை உருவாக்கியது.

தற்போது, அந்த எரிபொருள், அதாவது, உயிரி மண்ணெண்ணெய், ஜேர்மனியிலுள்ள விமான ஆய்வு மையத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுவருகிறது.

மேலும், பிரித்தானிய ஆய்வு மையங்களும் அந்த எரிபொருள் தொடர் சோதனைகளை மேற்கொள்ள இருக்கின்றன. பரிசோதனைகளின் முதற்கட்ட முடிவுகள், அந்த உயிரி மண்ணெண்ணெய் விமான எரிபொருளைப்போலவே செயல்படுவதாக தெரிவித்துள்ளன.

இந்த ஆய்வு வெற்றிகரமாக முடியுமானால், மனிதக் கழிவிலிருந்து, பிரித்தானியாவின் விமான எரிபொருள் தேவையில் 5 சதவிகிதம் சந்திக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...