சர்வதேச மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா வழங்கியுள்ள அறிவித்தல்

24 663b1a73db069

சர்வதேச மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா வழங்கியுள்ள அறிவித்தல்

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க சர்வதேச மாணவர்கள் தங்களுடைய விசாவைப் பெறுவதற்கு வைத்திருக்க வேண்டிய வங்கி கணக்கு சேமிப்பு தொகையை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டிற்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) முதல் ஒரு சர்வதேச மாணவர், அவுஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பிக்க, தங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் A$29,710 ( இலங்கை ரூபாவில் 5,866,960) இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கடந்த அக்டோபரில், A$21,041 (ரூபா 4,155,055) அவுஸ்திரேலிய டொலர்களில் இருந்து 24,505 (4,839,106) அவுஸ்திரேலிய டொலர்களாக உயர்த்தியிருந்தது. இந்நிலையில் தற்போது குறித்த தொகையை மீண்டும் உயர்த்தியுள்ளது.

இதேவேளை சேமிப்பு கணக்குகள் தொடர்பாக தவறான தகவல் தெரிவிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version