44523013 ustrumpone33
உலகம்செய்திகள்

ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது!

Share

தென் கொரியாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் டிரம்ப் உரையாற்ற இருக்கிறார்.

மாநாடு முடிந்த மறுநாள், அதாவது அக்டோபர் 30-ஆம் தேதி, டொனால்டு டிரம்ப் சீன அதிபர் ஜின்பிங்கைச் சந்தித்துப் பேச இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் இன்று இரவு (வெள்ளிக்கிழமை) முதலில் மலேசியா செல்வார் என்றும், அதன்பிறகு ஜப்பான் மற்றும் தென் கொரியா செல்ல இருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேச இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் போது டிரம்ப்பும் ஜின்பிங்கும் பல்வேறு முக்கியப் பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேச உள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர வேண்டும்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர எதிர்க்கட்சி நடவடிக்கை எடுக்க...

images 2 3
உலகம்

ரஷ்யாவுக்கு உதவிய இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை!

உக்ரைன் மீதான போரில் ரஷ்ய இராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட...

25 68fc4bb76f874
இலங்கைசெய்திகள்

பேருவளையில் வெள்ளை வேனில் கடத்தல்: முகமூடி அணிந்த குழுவினர் கைது செய்யப்படலாம்!

பேருவளையில் (Beruwala) வெள்ளை வேனில் முகமூடி அணிந்த ஒரு குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின்...

25 68fc8ee613459
செய்திகள்இலங்கை

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை: சிறையில் அடைக்கப்பட்ட ‘மிதிகம ருவான்’ மீது பொலிசார் விசாரணை!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிரதேச...