தென் கொரியாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் டிரம்ப் உரையாற்ற இருக்கிறார்.
மாநாடு முடிந்த மறுநாள், அதாவது அக்டோபர் 30-ஆம் தேதி, டொனால்டு டிரம்ப் சீன அதிபர் ஜின்பிங்கைச் சந்தித்துப் பேச இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் இன்று இரவு (வெள்ளிக்கிழமை) முதலில் மலேசியா செல்வார் என்றும், அதன்பிறகு ஜப்பான் மற்றும் தென் கொரியா செல்ல இருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேச இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் போது டிரம்ப்பும் ஜின்பிங்கும் பல்வேறு முக்கியப் பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேச உள்ளனர்.