tamilni 370 scaled
உலகம்செய்திகள்

சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி: பதவியேற்கும் முன்பே கைது வாரண்ட்

Share

சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி: பதவியேற்கும் முன்பே கைது வாரண்ட்

ஜேர்மனியில் சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி ஒருவர் பதவியேற்கும் முன்பே, அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள், மக்கள் புலம்பெயர்தலை எதிர்க்கும் வலதுசாரிக் கட்சியினருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதைக் காட்டின.

அதனால், ஜேர்மன் அரசியலில் பெரும் அதிர்வலைகள் உருவாகின. ஆளுங்கட்சியினரே, புலம்பெயர்தலுக்கெதிராக நடவடிக்கைகளைத் துவங்க இருப்பதாக அறிவிக்கவேண்டிய ஒரு கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல்வாதி பதவியேற்கும் முன்பே கைது வாரண்ட்
இந்நிலையில், சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்றவரான வலதுசாரிக் கட்சி அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The Alternative for Germany Party (AfD) என்னும் வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவரான Daniel Halemba (22) என்னும் அரசியல்வாதிக்கு எதிராகத்தான் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எதற்காக அவருக்கு எதிராக கைது வாரண்ட் என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை. அவர் இதுவரை கைது செய்யப்படவும் இல்லை, சரணடையவும் இல்லை.

இன்னொரு விடயம் என்னவென்றால், அமைச்சர்கள் தண்டனை போன்ற விடயங்களிலிருந்து தப்பமுடிவும். ஆனால், Daniel இன்னமும் அமைச்சராக பதவியேற்கவில்லை. ஆகவே, அவர் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வாரா, அல்லது கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

Share
தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...