ரவீந்தருக்கு நீதிமன்றம் விடுத்த நிபந்தனை இத்தனை கோடியா?
நட்புனா என்னனு தெரியுமா,முருங்கைக்காய் போன்ற படங்களைத் தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியவர் தான் ரவீந்தர் சந்திரசேகர்.இவர் கடந்த ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திர் சந்திரசேகர், திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய சொல்லி பாலாஜி என்பவரிடம் இருந்து ரூ.16 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்பட்டது. இதனால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
ரவீந்தர் சந்திரசேகர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்களை நீதிபதி மறுப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி ரவீந்தர் சந்திரசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்தர் தரப்பில் புகார்தாரருக்கு ரூ.2 கோடி திரும்ப வழங்கப்பட்டுவிட்டது என்று கூறினார்கள்.ஆனால் புகார் அளித்த பாலாஜி இந்த தகவல் முற்றிலும் பொய் என்றும் ரவீந்தர் அப்படி எதுவும் தரவில்லை என்று பதில் அளித்தார் இதையடுத்து, ரவீந்திரனின் ஜாமீன் மனு இன்று நீதிபதிகள் சிவி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரனின் வங்கிக்கணக்கை ஆராய்ந்ததில் பல வங்கி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
ஆனால் அவை அனைத்தும், இந்த வழக்கில் தொடர்புடையதா என தெரியவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து இந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தினால் மட்டுமே இது குறித்த முழு விவரம் தெரியவரும் என குறிப்பிட்ட நீதிபதி, இரண்டு வாரங்களில் ரூ.5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை ரவீந்தர் சந்திரசேகர் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.