17 10
இந்தியாஉலகம்செய்திகள்

பெரியார் விவகாரத்தில் சீமானுக்கு ஆதரவு குரல் கொடுத்த அண்ணாமலை

Share

பெரியார் விவகாரத்தில் சீமானுக்கு ஆதரவு குரல் கொடுத்த அண்ணாமலை

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய விவகாரத்திற்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

தந்தை ஈ.வெ.ரா பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீமானை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும், சீமான் மீது திமுக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரியார் குறித்து சீமான் பேசியது சரிதான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை பேசுகையில், “பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு ஆதாரங்களை நான் வெளியிடுகிறேன். அவர், எப்போது எங்கு பேசினார் என்று ஆதாரங்களை வெளியிடுகிறேன். அவர் பேசியதை பொதுவெளியில் கூறினால் நாகரீகமாக இருக்காது.

யுஜிசி புதிய விதி குறித்து நகலை வழங்கியுள்ளோம். நீங்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது” என்றார்.

Share
தொடர்புடையது
21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...