25 2 scaled
உலகம்செய்திகள்

பிரபல CEO ஆஞ்சலா சாவோ உயிரிழப்பு

Share

பிரபல CEO ஆஞ்சலா சாவோ உயிரிழப்பு

டெக்சாஸ் ராஞ்சில் மின்சார கார் விபத்தில் பிரபல கப்பல் நிறுவனமான போர்மோஸ்ட்(Foremost) குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஞ்சலா சாவோ பிப்ரவரி 9, 2024 அன்று உயிரிழந்தார்.

பிரபல போர்மோஸ்ட்(Foremost) குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் US செனட்டர் Mitch McConnell மைத்துனியுமான பில்லினர் ஆஞ்சலா சாவோ(Angela Chao) அமெரிக்காவின் டெக்சாஸ் ராஞ்சி பகுதியில் கார் விபத்தில் கடந்த மாதம் உயிரிழந்தார்.

ஆரம்ப கட்டத்தில் அவர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், நடத்தப்பட்ட தொடர் விசாரணை பிறகு வெளியான அறிக்கையில் ஆஞ்சலா சாவோ(Angela Chao) உயிரிழந்த போது இருந்த உண்மையான சூழ்நிலை தற்போது தெரியவந்துள்ளது.

அதில், அவர் வார இறுதியில் நண்பர்களுடன் ராஞ்சில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது.

அங்கிருந்து தனது சொந்த இல்லத்திற்கு புறப்படும் போது, டெஸ்லாவை தவறாமல் ரிவர்ஸ் கியரில் வைத்துவிட்டதாகவும், இதனால் கார் பின்புறம் இருந்த குளத்தில் மூழ்கியதாகவும் அவர் பதற்றத்துடன் ஒரு நண்பரிடம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

அத்துடன் அவர் காரின் கண்ணாடிகளை உடைத்து வெளியேற முயற்சி செய்துள்ளார் என்றும், ஆனால் அதில் தோல்வியடைந்து காருடன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

விபத்து குறித்த அவசர தகவல் கிடைத்ததும், நண்பர்கள், ராஞ்சி ஊழியர்கள் மற்றும் அவசரகால பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

மூழ்கிய காரை உடைத்து வெளியேற்றுவது அல்லது பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முயற்சித்தனர்.

இருப்பினும் மீட்புக் குழுவினர் சாவோவை காரில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்பே அவர் உயிரிழந்துவிட்டார்.

சாவோவின் மரணம் டெஸ்லா கார் பாதுகாப்பு குறித்த கவலைகளை, குறிப்பாக அவசர கால சூழ்நிலைகளில் மின்சார வாகனங்கள் தொடர்பான கவலைகளை எழுப்பியுள்ளது.

ஜன்னல்களை அணுகுவது மற்றும் மூழ்கிய மின்சார கார்களுக்கான அவசரகால பதில் நெறிமுறைகள் ஆகியவை பற்றிய கேள்விகளை இந்த சம்பவம் எழுப்புகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...