அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

download 13 1 2

மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் அந்நாட்டின் 2,153 அரசியல் கைதிகளுக்கு இன்று மன்னிப்பு வழங்கியுள்ளனர்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த மன்னிப்பு வழங்குவதாக மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மியன்மாரில் வெசாக் பண்டிகை கசோன் எனும் பெயரில் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று விடுவிக்கப்பட்ட கைதிகள் பலர்,  சிறைச்சாலைக்கு வெளியே காத்திருந்த தமது அன்புக்குரியவர்களுடன் இணைந்து கொண்டனர்.

2021 பெப்ரவரியில் மியன்மாரில் இராணுவப் புரட்சி நடத்தப்பபட்ட பின்னர் இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலும் வேறு செயற்பாடுகளிலும் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

21,000 பேர் கைது செய்யப்பட்டனர் என உள்ளூர் கண்காணிப்பு குழுவொன்று தெரிவித்துள்ளது. 170 ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டனர் ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  தண்டனைச் சட்டக்கோவையின் 505 (ஏ) பிரிவின் கீழ் தண்டனை பெற்ற 2153 பேரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். என மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது.

இக்குற்றத்துக்கு 3 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும்.

விடுதலையின் பின்னர் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் ஏற்கெனவே விதிக்கப்பட்ட தண்டனையின் எஞ்சிய காலத்தையும் அனுபவிக்க வேண்டியிருக்கும் என மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#world

Exit mobile version