அவர் தான் தாலி எடுத்து கொடுக்கணும்.. பாவனி உடன் திருமணம் பற்றி அறிவித்த அமீர்
பிக் பாஸ் ஷோவில் காதலில் விழுந்து தற்போது ஜோடியாக வலம் வருபவர்கள் பாவனி ரெட்டி மற்றும் அமீர். பாவனிக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
அது பற்றி பிக் பாஸிலும் எமோஷ்னலாக அவர் பேசி இருந்தார். இருப்பினும் அதே ஷோவில் அமீர் பாவனியிடம் காதலை சொன்னார். ஆரம்பத்தில் மறுத்த பாவனி அதன் பின் பிக் பாஸ் ஜோடிகள் ஷோவில் காதலை ஏற்றுக்கொண்டார்.
அதற்கு பிறகு இருவரும் ஒரே வீட்டில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்கள். அவர்களிடம் திருமணம் எப்போது என்று தான் எல்லா பேட்டிகளிலும் கேட்டு வருகிறார்கள். ஆனால் எதாவது பதில் சொல்லி கேள்விகளை சமாளித்து வந்தனர்
அவர் தான் தாலி எடுத்து கொடுக்கணும்..
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமீர் மற்றும் பாவனி தங்கள் திருமணம் இந்த வருடம் நடைபெறும் என்று அறிவித்து இருக்கின்றனர்.
மேலும் விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா தான் தாலி எடுத்து கொடுக்க வேண்டும். அவர் தான் நாங்கள் தற்போது ஒன்றாக இருக்க காரணம் என தெரிவித்து இருக்கிறார்.
Comments are closed.