இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்த கனடா

24 661b60739f058

இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்த கனடா

இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்வதாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

ரொறன்ரோவிலிருந்து தெல் அவீவிற்கு பயணம் செய்யவிருந்த விமானம் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிராந்திய வலயத்தில் நிலவி வரும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு எயார் கனடா நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

எயார் கனடா விமானம் உள்ளுர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 4.25 மணிக்கு பியர்சன் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்தது.

எனினும் அரசாங்கத்தின் பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் விமான சேவையை ரத்து செய்ததாக அறிவித்துள்ளது.

பிராந்திய வலயத்தின் நிலைமைகளை கருத்திற் கொண்டு விமானப் பயணங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட உள்ளதாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் மீது, ஈரானிய படையினர் கடுமையான ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் எயார் கனடா நிறுவனம் விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது.

Exit mobile version