ஆப்கானிஸ்தானில் இன்று (நவ 03) அதிகாலை உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 320 பேர் காயமடைந்துள்ளனர்.
நிலநடுக்க விவரம்: இந்த நிலநடுக்கம் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் உள்ள பல்ஹா மாகாணத்தின் மசிர் ஐ ஷெரிப் (Mazar-i-Sharif) நகரை மையமாகக் கொண்டு, 28 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடுயிட்டாகப் பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால், அதிகாலையில் உறங்கிக் கொண்டிருந்த பலரும் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர்.
சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அச்சம் காணப்படுகிறது.
தற்போது மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் 6.0 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

