ஆப்கான் குண்டுவெடிப்பு!!- பொறுப்பேற்றது ISIS!!

காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டைத் தாக்குதலுக்கு ISIS-கே (ஐ.எஸ்.ஐ.எஸ் காரோஷன்) என்ற பயங்கரவாத அமைப்பு தமது டெலிகிராம் கணக்கில் பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு அருகே நேற்று இரவு இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

1630028863 4639

மேலும் அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, 11 அமெரிக்க கடற்படையினர் மற்றும் கடற்படை மருத்துவ பணியாளர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் மேலும் 12 பணியாளர்கள் காயமடைந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

ஐ.எஸ்.ஐ.எஸ் காரோஷன் அமைப்புக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. எனவே இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Exit mobile version