பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம் என அந்நாட்டின் தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகத்தின் (Office for National Statistics – ONS) புதிய தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டில், பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பிரித்தானியர்கள் எண்ணிக்கை 77,000 என தெரிவிக்கப்பட்டது.
எனினும் உண்மையில் 257,000 பிரித்தானியர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பிரித்தானியாவுக்கு மீண்டும் திரும்பிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை 60,000 என முன்னர் கூறப்பட்ட நிலையில், 143,000 பிரித்தானியர்கள் பிரித்தானியாவுக்குத் திரும்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

