உலகம்செய்திகள்

சவுதி அரேபிய இளவரசர் மீது முன்வைக்கப்பட்டுள்ள பரபரப்பு குற்றச்சாட்டு

Share
5 34
Share

சவுதி அரேபிய இளவரசர் மீது முன்வைக்கப்பட்டுள்ள பரபரப்பு குற்றச்சாட்டு

சவுதி அரேபியாவின்(Saudi Arabia) பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது முன்னாள் அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரைத் தொடங்கும் அரச ஆணையில் தனது தந்தையும் அரசருமான அப்துலஜீசையின் கையொப்பத்தை போலியாக இட்டதாக முன்னாள் மேஜர் ஜெனரலும் உளவுத்துறை அதிகாரியுமான அல்-ஜப்ரி தெரிவித்துள்ளார்.

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா கடந்த 2015ஆம் ஆண்டு போா் பிரகடனம் செய்தது. தாக்குதல் நடத்துவதற்கான அரச உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவை அரசரை போல் போலியாக கையொப்பமிட்டு இளவரசா் முகமது பின் சல்மான் பிறப்பித்திருந்தாா். அரச ஆணையில் தனது தந்தையின் கையொப்பத்தை போலியாக இட்டார் என கனடாவில் உள்ள அதிகாரி தெரிவித்துள்ளார்.

வயது மூப்பு காரணமாக அரசரின் மூளைத் திறன் பாதிக்கப்பட்டிருந்தது. அதை பயன்படுத்தி இளவரசா் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் மீது போா் தொடுத்தாா். இளவரசர் முகமது தனது தந்தைக்குப் பதிலாக போரை அறிவிக்கும் ஆணையில் கையெழுத்திட்டார்.

அப்போது அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். எனது இரண்டு குழந்தைகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறேன். எனவே எனது குழந்தைகள் மற்றும் எனது நாட்டின் நலனுக்காக பேசுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

என்னை கொல்ல இளவரசர் விரும்புகிறார். என் கொலைக்கு அவர் திட்டமிட்டார். நான் இறந்து கிடக்கும் வரை அவர் ஓயமாட்டார்.

அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளமை தற்போது பேசுபொருளாகியுள்ளது. எனினும், முன்னாள் அதிகாரியின் இந்த குற்றச்சாட்டுக்கு சவுதி அரேபியா எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...