கருக்கலைப்பு மாத்திரைக்கு அனுமதி!

download 11 1 8

அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வந்த கருக்கலைப்பு மாத்திரையை, மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அந்நாட்டில் பெண்கள் கருகலைப்பு செய்வது, நீண்டகாலமாக நீடித்து வந்தநிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மாத்திரையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் கலைக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த தடை விதித்தும் கட்டுப்பாடு விதித்தும் நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம், அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரை மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

#world

Exit mobile version