5 13 scaled
உலகம்செய்திகள்

இளம் வயதில் மலை ஏறி சாதனை படைக்கும் சிறுமி

Share

இளம் வயதில் மலை ஏறி சாதனை படைக்கும் சிறுமி

இந்திய மாநிலம், பஞ்சாபை சேர்ந்த சிறுமி ஒருவர் இளம்வயதில் தொடர்ந்து மலை ஏறி சாதனை படைத்து வருகிறார்.

பல விளையாட்டுகளுக்கு மத்தியில் சிலர் மட்டுமே மற்ற செயல்கள் மூலம் தனித்துவம் பெறுவார்கள். அந்தவகையில், மலையேறுவதில் தனித்துவம் பெற்றவர் தான் இந்த சிறுமி.

பஞ்சாப் மாநிலம் ரூப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபக் சூத். இவரது மகள், சான்வி என்ற சிறுமி தான் மலை ஏறுவதில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்.

சமீபத்தில், ரஷியாவில் 5,642 மீட்டர் உயரத்தில் உள்ள எல்பரஸ் சிகரத்தில் சிறுமி சான்வி ஏறினார். இதனால், இளம் வயதில் எல்பரஸ் சிகரத்தை ஏறிய சிறுமி என்ற சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு, எவரெஸ்ட் மலை சிகரத்திலும் ஏறி இந்தியக் கொடியை அசைத்துள்ளார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் இளம் வயதில் ஏறிய சிறுமி என்ற சாதனையும் படைத்திருந்தார்.

மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தென்னாப்பிரிக்காவில் உள்ள 5,895 மீட்டர் உயரத்தில் உள்ள கிளிமாஞ்சாரோ சிகரத்திலும், கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவில் 2,228 மீட்டர் உயரம் உள்ள கோஸ்சியூஸ்கோ சிகரத்திலும் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இளம் வயதில் மலை ஏறி சாதனை படைக்கும் சான்விக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதனிடையே, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சான்வியின் சிறந்த பங்களிப்பிற்காக சுதந்திர தினத்தன்று மாநில விருது வழங்கி கௌரவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...