நிர்வாணமாக ஊர்வலம் தூக்கி செல்லப்பட்ட பெண் ராணுவ வீரர்

2023 10 07T085552Z 689753662 RC2

நிர்வாணமாக ஊர்வலம் தூக்கி செல்லப்பட்ட பெண் ராணுவ வீரர்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் சூழல் தலைதூக்கி இருக்கும் நிலையில், பெண் ராணுவ வீராங்கனை ஒருவரை கொன்று நிர்வாணப்படுத்திய சம்பவம் அரங்கேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று அதிகாலை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் Al-Aqsa Flood ஆபரேஷன் என்ற பெயரில் இஸ்ரேல் மீது 20 நிமிடங்களில் கிட்டத்தட்ட 5000 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் சுமார் 20 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக Operation Iron Swords என்ற பெயரில் வான் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.

இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையே இடைவிடாத சண்டை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் பெண் வீராங்கனை ஒருவர் கொல்லப்பட்டதுடன், எதிர் அமைப்பினரால் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண் வீராங்கனை கொலை செய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு பல்வேறு கோஷங்களுடன் சாலையில் எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் செய்தி வெளியாகி இஸ்ரேல் மற்றும் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் இந்த செய்தியின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் எங்களுக்கு தெளிவாக கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version