இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

24 661a86c97ede6

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும்(Iran) இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தொடர்ந்து, இஸ்ரேலில்(Israel) வசிக்கும் இலங்கையர்கள்(sri lankan people) எச்சரிக்கப்படுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எந்தவொரு அவசரநிலையையும் எதிர்நோக்கி எச்சரிக்கையுடன் செயற்படுமாறு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

டெல் அவிவில் உள்ள இலங்கைத் தூதுவர் தமது பேஸ்புக் பதிவில், தேவையற்ற ஈடுபாடுகளுக்காக இலங்கையர்கள் தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுள்ளார்.

அத்துடன் பல்வேறு நோய்களுக்கான மருந்துகளை உட்கொள்ளும் இலங்கையர்கள் ஏதேனும் அவசரகால சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில், நீண்ட காலத்திற்கு போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் போதிய உணவு பொருட்களை சேகரித்து வைத்துக்கொள்ளவும், இலங்கையர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version