இந்தோனேசியாவிற்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் தவறாக நடந்து கொண்டமையால் நாடு கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய நாட்டை சேர்ந்த 24 வயதுடைய யூரி சிலிக்கின் என்ற ஆடவரே சுற்றுலாவிற்காக இந்தோனேசியா சென்றுள்ளார். அங்கு புனிதத் தலம் ஒன்றின் மேல் அரை நிர்வாணமாக இருந்தவாறு புகை படம் எடுத்துள்ளார்.
இந்துக்கள் புனிதத் தலமாகக் கருதும் அகுங்மலையின் உச்சியில் இடைக்குக் கீழே ஆடையின்றிபடமெடுத்துள்ளார். இதனை அறிந்த அந்நாட்டு அரசாங்கம் அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது புனித தலத்தினை அவமதித்தமையால் அவரை நாடு கடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிரபல சுற்றுலாத் தலமான பாலி, தவறாக நடந்துகொள்ளும் சுற்றுப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment