1697982013 phi 2
உலகம்செய்திகள்

பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பு: வர்த்தகர்களுக்கு எதிராக வழங்கு தாக்கல்

Share

பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பு: வர்த்தகர்களுக்கு எதிராக வழங்கு தாக்கல்

தீபாவளி முன்னிட்டு ஹட்டன் நகரில் திடீர் சுற்றிவளைப்பின் போது மக்கள் பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் விற்பனை செய்த மற்றும் சுத்தமற்ற நிலையில் உணவு தயாரித்த பல வர்த்தகர்களுக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார அலுவலகத்திற்கு நாளாந்தம் ஹட்டன் நகரில் பாவனைக்கு உதவாத உணவு பொருட்கள் விற்பனை செய்து வருவதாகவும் ஹோட்டல்களில் சுத்தமின்றி உணவு பாதுகாப்பற்ற முறையில் உணவு தயார் செய்வதாகவும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்து வருவதாகவும் முறைபாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் அம்பகமுவ வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து இன்று (04.11.2023) சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பில் சுமார் 28 பொது சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் ஹட்டன் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களை சோதனை செய்த போது அங்கு பொது மக்கள் பாவணைக்குதவாத பொருட்கள் விற்பனை செய்து வருவதனையும், பாதுகாப்பற்ற முறையில் உணவு தயாரித்து வருவதனையும், சுகாதாரதிற்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய இனிப்பு பண்டங்கள் விற்பனை செய்வதனையும் கண்டு பிடிக்கப்பட்டது.

அவ்வாறு விற்பனை செய்த பல வர்த்தகர்களுக்கு ஹட்டன் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பலர் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வருகின்ற தீபாவளி தினத்தில் பொது மக்கள் பாதுகாப்பு கருதியே இந்த வேலைத்திட்டம் முன்னெடுத்துள்ளதாகவும் இது நுவரெலியா மாவட்டம் முழுவதும் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்டத்தின் மிக முக்கிய நகரமாக ஹட்டன் நகரம் காணப்படுவதனால் இந்த வேலைத்திட்டத்தினை ஹட்டனிலிருந்து ஆரம்பித்துள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் காமதேவன் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...