வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்
தென்கொரியாவில் வேலைக்குச் சென்ற இலங்கையர் ஒருவர், அவருடன் இருந்த மற்றொரு இலங்கையரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் கடந்த 3ம் தேதி அதிகாலை நடந்துள்ளது. பமுனுகம பிரதேசத்தில் வசித்து வந்த பி. கே. ஷெனித் துலாஜ் சதுரங்க என்ற 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுளார்.
சதுரங்காவை கத்தியால் குத்திய நபர் உள்ளூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவரை பக்கத்து அறையில் இருந்த மற்றுமொரு இலங்கையரால் குத்தி கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.