images 4 1
உலகம்செய்திகள்

தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!

Share

ஜேர்மனியில் டியுஸ் பேர்க் நகரத்தில் மீண்டும் ஒரு கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனியில் டியுஸ் பேர்க் நகரத்தில் வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் வீதிக்க ஓடி வந்துள்ளார்.

அதாவது 53 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

பின் குறித்த பெண் கத்தி குத்து காயத்துடன் இரத்தம் வெளியேறிய நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்துள்ள நிலையில் வீதியில் வைத்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பெண்ணின் 29 வயதுடைய மகனை பொலிஸார் தேடி வருவதாக தெரிய வந்திருக்கின்றது.

இவர் ஏற்கனவே மன ரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கின்றது.

மேலும் இந்த கொலை இடம் பெற்ற தினம் அவர் மனநல வைத்தியசாலையில் நியமனம் ஒன்றை பெற்றிருந்துள்ளார்.

ஆனால் அன்றைய தினம் அந்த வைத்திய சாலைக்கு செல்லவில்லை என்றும் தெரியவந்திருக்கின்றது.

இதன் காரணத்தினால் தற்பொழுது பொலிஸார் 29 வயதுடைய மகனை தேடி வருவதாக தெரியவந்திருக்கின்றது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 99
உலகம்செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் முட்டுக்கட்டை: அமைதி ஒப்பந்தம் இன்றி இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான நிபந்தனையை ஏற்க...

world 98
செய்திகள்உலகம்

ஹைட்டியில் சுற்றுலாத் தளத்தில் பயங்கரம்: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி!

ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பாரிய...

world 97
செய்திகள்உலகம்

ஈரான் இனி பழைய ஈரான் அல்ல: அணுசக்தி திட்டங்களை முறியடித்துவிட்டதாக நெதன்யாகு அதிரடி அறிவிப்பு!

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “வரலாற்றுச் சாதனைகளை” படைத்துள்ளதாகவும், அதன் அணுசக்தி லட்சியங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலியப்...

world 96
செய்திகள்உலகம்

14 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்கா – ஈரான் இடையில் எஞ்சியுள்ள முரண்பாடுகள்!

மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர்...