பிரித்தானிய இளம்பெண்ணுக்கு அனுப்பப்பட்ட பார்சல்: எடுத்த துயர முடிவு

23 64e9cc8cf261f md

பிரித்தானிய இளம்பெண்ணுக்கு அனுப்பப்பட்ட பார்சல்: எடுத்த துயர முடிவு

பிரித்தானிய இளம்பெண் ஒருவரின் தாய்க்கு, புத்தாண்டு தினமே வேதனைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது. அதற்குக் காரணம், அன்றுதான் அவரது மகள் தற்கொலை செய்துகொண்டார்.

இங்கிலாந்திலுள்ள Brightonஇல் வாழ்ந்துவந்த அழகிய இளம்பெண்ணான இமோஜனுக்கு (Imogen Nunn, 25) காது கேட்காது. ஆனாலும், தன்னைப் போல் காது கேளாமை பிரச்சினை கொண்டவர்கள் மற்றும் மன நல பிரச்சினைகளுக்காக சமூக ஊடகம் ஒன்றில் குரல் கொடுத்துவந்தார் இமோஜன். அவரை, 780,000 பேர் பின்தொடர்கிறார்கள்.

புத்தாண்டு தினத்தில் எடுத்த முடிவு
இந்நிலையில், இந்த ஆண்டு, புத்தாண்டு தினத்தன்று தற்கொலை செய்துகொண்டார் இமோஜன். விடயம் என்னவென்றால், பல பிரித்தானியர்களுக்கு தற்கொலை செய்யும் ரசாயனம் அனுப்பிய கனேடியரான Kenneth Law (57) என்பவர் அனுப்பிய அதே ரசாயனத்தை உட்கொண்டுதான் இமோஜனும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Kenneth Law, 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அந்த ரசாயனத்தை அனுப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. Kenneth Lawவின் கைதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து அந்த ரசாயனத்தை வாங்கிய பிரித்தானியர்கள் தொடர்பில் பிரித்தானிய பொலிசார் விசாரணையைத் துவக்கினார்கள்.

விசாரணையில், இரண்டு ஆண்டுகளில் 232 பிரித்தானியர்கள் Kenneth Lawவிடம் அந்த ரசாயனத்தை வாங்கியுள்ளார்கள் என்பதும் அவர்களில் 88 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பதும் தெரியவந்துள்ளதால் பிரித்தானியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

அந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்துதான், இமோஜனின் தாயும், தன் மகளுடைய தற்கொலை குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version