16 34
உலகம்செய்திகள்

முதியோர் இல்லத்தில் உருவான காதல்.., 4000 பேருக்கு விருந்து கொடுத்து அமோக திருமணம்

Share

முதியோர் இல்லத்தில் உருவான காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்ற சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய மாநிலமான அசாம், கோலாகட் மாவட்டத்தில் உள்ள போககாட் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பத்மேஸ்வர் கோலா (71). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனது 2 சகோதரர்களின் ஆதரவில் இருந்து கொண்டு வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருடைய இரண்டு சகோதரர்களும் இறந்து விட்டதால் பெல்டோலா பகுதியிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

அதேபோல், சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேஜ்பூரை சேர்ந்தவர் ஜெயபிரபா (65). இவருக்கும் குடும்ப சூழ்நிலை காரணமாக இன்னும் திருமணமாகவில்லை. இவரும், கவுகாத்தியில் மத்காரியா பகுதியிலுள்ள பெண்களுக்கான முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த வருடம் மார்ச் மாதம் சந்தித்துள்ளனர். இதில், பத்மேஸ்வரருக்கு நல்ல குரல் வளம் இருப்பதால் இந்தி பாடல்களை அடிக்கடி பாடுவார். இது ஜெயபிரபாவுக்கு மிகவும் பிடிக்கவே, இருவரும் விரும்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்த விடயம், இரு முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு தெரியவரவே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.

பின்னர், இத்திருமணத்தை நடத்தி வைக்க மோனாலிசா சொசைட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் விருப்பம் தெரிவித்தது. இதையடுத்து, இருவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து முறைப்படியே திருமண சடங்குகள் அனைத்தும் நடந்தன.

இது தொடர்பாக தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான உத்பால் ஹர்சவர்தன் கூறுகையில், “பொது நிதியுதவியுடன் இந்த திருமணத்தை செய்து முடித்துள்ளோம். திருமணத்திற்கு வந்த 4000 பேருக்கு உணவு பரிமாறியுள்ளோம். அவர்கள் மணமக்களை வாழ்த்தி சென்றனர்” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...