இளவரசர் ஹரியைப் பின்பற்றும் குட்டி இளவரசர்: கவலையில் இளவரசி கேட்

24 66275809e5771

இளவரசர் ஹரியைப் பின்பற்றும் குட்டி இளவரசர்: கவலையில் இளவரசி கேட்

இளவரசர் வில்லியம் இளவரசி கேட் தம்பதியரின் கடைசி மகனான குட்டி இளவரசர் லூயிஸ் பெரும் குறும்புக்காரராக இருக்கிறாராம்.

பொது நிகழ்ச்சிகளின்போது கோணல் மாணலாக முகத்தை வைத்துக்கொண்டு அவர் செய்யும் குறும்புகளைக் காட்டும் புகைப்படங்கள் சாதாரணம்.

இதற்கிடையில், குட்டி இளவரசர் லூயிஸ், ஒரு விடயத்தில் தனது சித்தப்பாவான இளவரசர் ஹரியைப் பின்பற்றுகிறாராம்.

அது, என்னவென்றால், இளவரசர் ஹரியைப் போலவே, குட்டி இளவரசர் லூயிஸும் ரக்பி விளையாட்டுப் பிரியராம்.

அதுவும், அவரது விளையாட்டு ஸ்டைல் முரட்டுத்தனமாக இருப்பதாக கவலைப்படுகிறார் அவரது தாயான இளவரசி கேட்.

இப்போதே இப்படியென்றால், அவர் வளர்ந்தால் எப்படி இருப்பார் என அவரது பெற்றோர் கவலைப்படுகிறார்களாம்.

இளவரசர் ஹரியும் ரக்பி விளையாட்டுப் பிரியர் என்பதும், ரக்பி தனது இதயத்தை எப்படிக் கொள்ளையடித்தது என்பதை அவர் தனது புத்தகமான ஸ்பேரில் குறிப்பிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version