மூக்கால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனை
சாதனைகளில் பலவகை உண்டு .அதுவும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் புதிது புதிதாக யோசிக்கிறார்கள் மனிதர்கள்.
அப்படி யோசித்து சாதனை படைத்தவர் தான் இந்த டென்மார்க்கை சேர்ந்த பீட்டர் வான் டாங்கன் புஸ்கோவ்.
39 வயதான அவர் தனது மூக்கு துவாரத்திற்குள் 68 தீக்குச்சிகளை திணித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனையை படைத்த முதல் நபர் இவர் ஆவார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “எனக்கு மிகப்பெரிய நாசி மற்றும் மிகவும் நீளமான தோல் உள்ளது. அது எனக்கு சாதனை படைக்க உதவியது என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.