உலகம்செய்திகள்

வெளிநாட்டவர்களை வரவேற்க பல நல்ல நடவடிக்கைகளை எடுக்க விரும்பும் ஜேர்மன் நகரம்

Share

வெளிநாட்டவர்களை வரவேற்க பல நல்ல நடவடிக்கைகளை எடுக்க விரும்பும் ஜேர்மன் நகரம்

வெளிநாட்டவர்களைக் கவர ஜேர்மனி பல நடவடிக்கைகள் எடுத்துவருவது அனைவரும் அறிந்த விடயம்தான். ஆனால், ஜேர்மன் நகரம் ஒன்று ஒரு படி மேலே போய், வெளிநாட்டவர்களுக்காக பல நல்ல திட்டங்களை துவக்க தீவிரமாக முயன்றுவருவதாக வெளியாகியுள்ள செய்தி மனம் மகிழச் செய்வதாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்காக திட்டங்கள்
ஜேர்மனி ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு என்பதால். பிற ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் ஜேர்மனிக்கு வருவதில் பெரிய பிரச்சினைகள் இருக்கப்போவதில்லை. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத வெளிநாட்டவர்களுக்கு சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஜேர்மனி மட்டுமின்றி பல நாடுகள் தற்போது பணியாளர் தட்டுப்பாட்டால் திணறிவருகின்றன. ஆகவே, பணியாளர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காக மற்ற நாட்டுப் பணியாளர்களை வரவேற்க அவை நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.

ஜேர்மனியோ, அதற்காக புதிய சட்டம் உருவாக்கும் எல்லை வரை சென்றுவிட்டது.

வெளிநாட்டவர்களை வரவேற்க பல நடவடிக்கைகள்
அதையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட ஜேர்மன் நகரம், வெளிநாட்டவர்களுக்காக, அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத வெளிநாட்டவர்களை வரவேற்பதற்காக, பல நல்ல நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.

அப்படி வெளிநாட்டவர்களுக்காக திட்டங்களைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள ஜேர்மன் நகரம் Munich.

ஆம், Munich நகர பசுமைக் கட்சியினர், ஜேர்மனிக்கு வரும் வெளிநாட்டவர்களுக்காக ‘வரவேற்பு மையம்’ ஒன்றை உருவாக்க விரும்புகிறார்கள்.

அதாவது, சில நாடுகள், வெளிநாட்டவர்களை வரவேற்கின்றன. ஆனால், அவர்கள் வந்தபின்,

அன்றாட வாழ்வில் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். வீடு வாடகைக்கு பிடிப்பது, பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது, வங்கிக் கணக்கு துவங்குவது போன்ற விடயங்கள் புதிய நாட்டில் அவர்களுக்குக் கடினமாக உள்ளன.

புது வாழ்வைத் துவக்கலாம் என சில நாடுகளுக்கு வந்த மக்கள், அமைதியாக தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிச் சென்ற விடயங்களும் நிகழ்ந்தது நினைவிருக்கலாம்.

ஆகவே, Munich நகருக்கு வரும் மக்கள் அப்படி எந்த பிரச்சினைகளையும் சந்திக்கக்கூடாது. அதாவது, அவர்கள் ஜேர்மனிக்கு வருவது மட்டுமல்ல, அங்கேயே மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழவேண்டும் என Munich நகர பசுமைக் கட்சியினர் விரும்புகிறார்கள்.

அபப்டியானால், ஜேர்மனிக்கு வருவோருக்கு, வீடு வாடகைக்கு பிடிப்பது, பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது, வங்கிக் கணக்கு துவங்குவது போன்ற விடயங்களை எளிதாக்கவேண்டும், அதற்கு உதவவேண்டும் இல்லையா?

ஆகவே, அப்படி வெளிநாட்டவர்களுக்கு சகல உதவிகளையும் செய்யும் ஒரு வரவேற்பு மையத்தைத்தான் Munich நகர பசுமைக் கட்சியினர் உருவாக்க விரும்புகிறார்கள் என வெளியாகியுள்ள தகவல், பெருமகிழ்ச்சியை உருவாக்குவதாக அமைந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...