உலகம்செய்திகள்

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை மீது கார் மோதி விபத்து

Share
24 6637e2ab0d99d
Share

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை மீது கார் மோதி விபத்து

அமெரிக்காவில்(United States) உள்ள வெள்ளை மாளிகையின் வெளிப்புற வாயில் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “நேற்று இரவு 10:30 மணியளவில் அதிவேகமாக வந்த கார் வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற சுவற்றில் மோதியது.

இதனால், வெள்ளை மாளிகைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சாரதியை மீட்க முயன்ற வேளை அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.

இரகசிய சேவை. கொலம்பியா மாவட்டத்தின் பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறைகளுடன் இணைந்து, இந்த அபாயகரமான விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் அந்தோனி குக்லீல்மி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற வாயிலில் வாகனமொன்று மோதி விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...