download 2 1 5
உலகம்செய்திகள்

தூங்கினால் இறந்துவிடும் நோயினால் போராடும் 6 வயது சிறுமி!

Share

தூங்கினால் மூச்சு நின்று உயிரிழந்து விடும் மிகவும் ஆபத்தான அரிய வகை நோயால் பிரித்தானியாவை சேர்ந்த 6 வயது சிறுமி  பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியை சேர்ந்த ஸ்டார் போயர்(48) மற்றும் அவரது கணவர் ஆண்ட்ரூ போயர் (44) ஆகியோருடைய 6 வயது மகள் சேடி மத்திய ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம் என்ற அரிய வகை பிறவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தாயார் ஸ்டார் பேசிய போது, சேடி ஒவ்வொரு நாள் இரவும் எந்த நிமிடமும் இறப்பதற்கான வாய்ப்புடன் இருக்கிறாள், அவளது மூளை சுவாசிப்பது மற்றும் இதயம் துடிப்பதற்கு தேவையான சிக்னல்களை அனுப்ப மறந்து விடுகிறது.

சேடி மிகவும் உன்னிப்பாக எதையாவது கவனித்தால், அவள் சுவாசிப்பதை நிறுத்தி விடுவாள், இதனால் கார்பன் மோனாக்சைட் உடலில் தங்கி அவள் சோர்வடைந்து விடுவதுடன், அவளது உடலும் நீல நிறமாக மாறத் தொடங்கி விடும்.

ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சியில் பெப்பா பன்றி நிகழ்ச்சியை  சேடி பார்க்கும் போது, இவ்வாறு அதை உன்னிப்பாக கவனித்து மூச்சு நின்று மயங்கி விடுவாள். நாங்கள் உடனடியாக அவளை வென்டிலேட்டரில்  வைக்க நேரிடும்.

திடீரென தூங்கிவிட்டாலும் அவளது மூளை செயல்பாடுகளை நிறுத்தி விடும், இது சேடியின் உயிருக்கு ஆபத்தான நிலை என்பதால், கடந்த 6 வருடங்களாக சரியான தூக்கம் இன்றி சேடியை கவனித்து வருகிறோம் என அவரது தாயார் ஸ்டார் தெரிவித்துள்ளார்.

சேடி பிறந்த முதல் ஆறு மாதங்கள் சுவாச பிரச்சினைகள் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், இரண்டாவது மாதத்தில் சேடிக்கு  மத்திய ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம் என்ற அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த அரிய வகை நோய் காரணமாக அவள் மூச்சு விடுவதற்கு உதவியாக கழுத்தில் துளை போடப்பட்டு சுவாச குழாய் ஒன்று அவளது சுவாச பாதையில் இணைக்கப்பட்டுள்ளது.இத்தகைய அரிய வகையான நோய்  பாதிப்பு இதுவரை 1000 பேருக்கு  ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

பகலில்  மிகவும் சாதாரண குழந்தை ஆனால் அவள் தூங்கிவிட்டாள் சுவாசிப்பதை நிறுத்தி விடுவாள், மேலும் சேடி தன்னிச்சையான மற்றும் தனிமையை விரும்பும் குழந்தை, அவள் அறையில் செவிலியர்கள் யார் இருப்பதையும் அவள் விரும்ப மாட்டாள் என்று அவரது தாயார் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சேடியின் பெற்றோர், வென்டிலேட்டர் இல்லாமல் சுவாசிக்க உதவும் பேசர்களை சேடிக்கு பொருத்த தேவையான பண உதவியை திரட்டி வருகின்றனர்.சேடியின் இந்த சிகிச்சைக்கு £1,60,000 பவுண்ட்கள் தேவைப்படுகிறது, இது அவளது வாழ்க்கையை மாற்றலாம் என்றும் குழந்தையின் தாயார் ஸ்டார் போயர் தெரிவித்துள்ளார்.

#world

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...