3 17 scaled
உலகம்செய்திகள்

7 வயது மகளுக்கு நேர்ந்த வன்கொடுமை.., உடந்தையாக இருந்த தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை

Share

7 வயது மகளுக்கு நேர்ந்த வன்கொடுமை.., உடந்தையாக இருந்த தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை

இந்திய மாநிலம், கேரளாவில் 7 வயது மகள் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விரைவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், இவர் தனது 7 மற்றும் 11 வயது மகள்களுடன் கணவரை பிரிந்து மற்றொரு ஆணுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், இவரின் 7 வயது மகளை ஆண் நண்பர் பல முறை வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இதுகுறித்து, 7 வயது மகள் தாயிடம் தெரிவித்துள்ளார். அதற்கு, இது பொதுவான விஷயம் என்றும், யாரிடமும் இது பற்றி தெரிவிக்கக் கூடாது கூடாது என்றும் சிறுமியிடம் தாய் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, பல முறை 7 வயது மகளை வன்கொடுமை செய்ய அந்த ஆண் நண்பருக்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதனால், 7 வயது சிறுமி தனது 11 வயது சகோதரியிடம் தனக்கு நடந்த கொடுமையை பற்றி கூறியுள்ளார். அதற்கு, தனக்கும் இதுபோல வன்கொடுமை நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், இரண்டு சிறுமிகளும் தனது பாட்டி வீட்டுக்கு தப்பித்துச் சென்று நடந்தது குறித்து கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பாட்டி பொலிஸில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின்படி, சிறுமிகளின் தாய் மற்றும் அவருடன் வாழ்ந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் குற்றவாளியான ஆண் நண்பர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், சிறுமிகளின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, விரைவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...

image 1200x800 34
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டத்தரணி படுகொலை வழக்கு: கைது செய்யப்பட்ட சகோதரர்களுக்கு நாளை வரை தடுப்புக்காவல்! – கடுவலை நீதிமன்றம் உத்தரவு!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு...

image 1200x800 37
உலகம்செய்திகள்

அமெரிக்க ஹொக்கி மைதானத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! – குடும்பத் தகராறால் நேர்ந்த கொடூரம்!

அமெரிக்காவின் ரோட் ஐலண்ட் (Rhode Island) பகுதியில் உள்ள ஹொக்கி மைதானம் ஒன்றில் அரங்கேறிய துப்பாக்கிச்...

image 1200x800 36
செய்திகள்உலகம்

இம்ரான் கானைக் காப்பாற்ற ஒன்று திரண்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள்! – கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 14 ஜாம்பவான்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், 1992-ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த...