கொல்லப்பட்ட 9000 பொதுமக்கள்: உக்ரைன் போரின் 500வது நாளில் ஐ.நா

rtjy 78

கொல்லப்பட்ட 9000 பொதுமக்கள்: உக்ரைன் போரின் 500வது நாளில் ஐ.நா

உக்ரைன் போரில் இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9000 பொதுமக்கள் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக உக்ரைன் மீது தாக்குதலை தொடங்குவதாக அறிவித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீதான முழுநீளப் போரை ரஷ்யா அறிவித்தது.

இதுவரை நடந்துள்ள போர் தாக்குதலில் ரஷ்யாவின் மீது பல்வேறு உலக நாடுகள் போர் அத்துமீறல் குற்றச்சாட்டை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் கடந்த ஆண்டு தொடங்கிய இந்த போரானது, ஆண்டுகளை கடந்து தற்போது 500 நாட்களை தொட்டுள்ளது.

இந்த 500 நாட்களும் ரஷ்யா உக்ரைன் மீது வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல், அல்லது ட்ரோன் தாக்குதல் போன்ற ஏதாவது ஒரு வகை தாக்குதலை நடத்தி வருகிறது, இதில் லட்சக்கணக்கான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போர் 500வது நாளை தொட்டு இருப்பதை மேற்கோள் காட்டி, உக்ரைனில் உள்ள ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRMMU) வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இதுவரை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 500 குழந்தைகள் உட்பட 9000 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த இறப்பு எண்ணிக்கையானது கூடுதலாக இருக்கும் என்று ஐ.நா பிரதிநிதி முன்னர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version