மத்திய நைஜீரியாவில் ஏற்பட்ட வாகன விபத்து: 48 பேர் பலி
மத்திய நைஜீரிய மாநிலமான நைஜரில் ஏற்பட்ட வாகன விபத்தில் குறைந்தது 48 பேர் பலியாகியுள்ளதாக அந்த நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவமானது, நேற்று (08) உள்ளூர் நேரப்படி 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பயணிகள் மற்றும் கால்நடைகளை ஏற்றிச் சென்ற பாராவூர்தி ஒன்றின் மீது எரிபொருள் கொள்கலன் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்தின் போது இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் மேலும் சில வாகனங்களும் வெடிப்பில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.