உலகம்செய்திகள்

ஜேர்மனியில் பரபரப்பு: உக்ரைன் ஜனாதிபதி வருகையின் போது நடந்த அசம்பாவிதம் – பலர் படுகாயம்

Share
16 11
Share

ஜேர்மனியில் பரபரப்பு: உக்ரைன் ஜனாதிபதி வருகையின் போது நடந்த அசம்பாவிதம் – பலர் படுகாயம்

ஜேர்மனி (Germany) – முனிச்சில் நகரத்தில் கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் மோதியதில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவராத நிலையில், 15 மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றே தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, காவல்துறையினர் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறுயுள்ளதுடன், அவர்களில் பலர் கவலைக்கிடமாகவும், மோசமான நிலையிலும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் மீட்பு நடவடிக்கைள் இடம்பெற்று வருவதாகவும், காரின் சாரதி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது பயங்கரவாத தாக்குதலா விபத்தா என்பது குறித்து தெரியவராத நிலையில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், போக்குவரத்து தொழிற்சங்கமான வெர்டியுடன் இணைக்கப்பட்ட பேரணிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த நகரத்தில் மியூனிக் பாதுகாப்பு மாநாடு ஆரம்பிக்கபடவிருந்த நிலையில், அமெரிக்க பிரதி தலைவர் ஜே.டி. வான்ஸும் உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கியும் இன்று வரவிருந்த சில மணி நேரத்திற்கு முன்பு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு மாநாட்டு, சம்பவ இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் (1 மைல்) தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...