உலகம்செய்திகள்

போருக்குத் தயாராகிறதா ஜேர்மனி? போர்வீரர்களாகும் பொதுமக்கள்

Share
27 1
Share

போருக்குத் தயாராகிறதா ஜேர்மனி? போர்வீரர்களாகும் பொதுமக்கள்

ஜேர்மனி, 1949இல் கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிந்தபோது, அதனிடம் போதுமான ராணுவ வீரர்கள் இருந்தார்கள்.

ஆனால், 1990இல் கிழக்கும் மேற்கும் இணைந்து ஒரே ஜேர்மனியானபின், ராணுவத்தின் தேவை பெரிய அளவில் இல்லை என கருதப்பட்டதால் ராணுவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

2000இல், ஜேர்மன் ராணுவம் 40 சதவிகித ராணுவ வீரர்களைக் குறைத்துவிட்டது.

ஆனால், இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஜேர்மன் ராணுவம் மீண்டும் ஆட்களை சேர்க்கத் துவங்கியுள்ளது.

திரைப்படங்களில் விளம்பரம், விளம்பர போர்டுகள், அவ்வப்போது இளைஞர்களை ஈர்க்கும் வகையில் முகாம்கள் என மக்களை ராணுவத்தின்பால் ஈர்க்கத் துவங்கியுள்ளது ஜேர்மனி.

விளைவு, இன்று ஜேர்மன் ராணுவத்தில் 179,000 ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். நேட்டோ அமைப்பின் ஆறாவது பெரிய ராணுவம் என்னும் பெருமையை எட்டியும், ஜேர்மனி திருப்தியடையவில்லை. 2031இல் 203,000 ராணுவ வீரர்கள் என்னும் இலக்கை நியமித்துள்ளது.

ஆக, நேற்று வரை அலுவலகங்களில் பணியாற்றி வந்த பொதுமக்கள் பலர், இன்று ராணுவத்தில் ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு ஒரே காரணம், உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதுதான். ரஷ்யா உக்ரைன் போரைப்பார்த்து, திடீரென போர் என்னும் நிலை உருவானால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்னும் எணம் ஜேர்மனிக்கு வந்துவிட்டது.

ஆக, போர் வந்தால் அதை எதிர்கொள்ள ஜேர்மனி தயாராகிக்கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

 

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...