உலகம்செய்திகள்

ரஷ்யாவின் எண்ணெய் விற்பனையை மொத்தமாக முடக்க திட்டம்: பல நாடுகள் பாதிக்கப்படலாம்

Share
13 4
Share

ரஷ்யாவின் எண்ணெய் விற்பனையை மொத்தமாக முடக்க திட்டம்: பல நாடுகள் பாதிக்கப்படலாம்

உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவின் எண்ணெய் விற்பனையை மொத்தமாக முடக்க ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.

ரஷ்யாவின் எண்ணெய் விற்பனையை முடக்குவதுடன், ரஷ்ய கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் நிறுவனங்களையும் குறிவைக்க உள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்பதற்கு முன்னர் உக்ரைனுக்க்கான உதவிகளை அதிகரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளது.

உக்ரைனுக்கு கணக்கில்லாமல் அள்ளிக்கொடுப்பதாக டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து புகார் கூறிவரும் நிலையிலேயே ஜோ பைடன் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும், ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகள் தொடர்பில் புதிதாக மீண்டும் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்டு ட்ரம்பின் நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதில் உறுதியில்லை.

இந்த நிலையில், மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ள விலை வரம்பான, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 60 டொலருக்கு மேல் விற்கப்படும் ரஷ்ய எண்ணெயைக் கொண்டு செல்லும் டேங்கர்களைக் குறிவைத்து பைடன் நிர்வாகம் பொருளாதாரத் தடைகளைத் திட்டமிட்டு வருகிறது.

மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ள இந்த 60 டொலர் வரம்பை மீறி, பல காலமாக பயன்பாட்டில் இருக்கும் கப்பல்களை பயன்படுத்தி எண்ணெய் ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டி வருகிறது ரஷ்யா.

ரஷ்யாவால் பயன்படுத்தப்படும் இந்த கப்பல்கள் பாதுகாப்பற்றவை என்றும், எண்ணெய் கசியும் ஆபத்து இருப்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உக்ரைன் மீதான போருக்கு பின்னர் டசின் கணக்கான கப்பல்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.

விலை வரம்பு இருப்பதால், ரஷ்யா தனது எண்ணெய் விற்பனையை ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்கத் தயாராக இருக்கும் சீனா மற்றும் இந்தியாவுக்கு திருப்பி விட்டுள்ளது.

பொதுவாக விலை வரம்புக்கு மேல் விற்கப்பட்டாலும் ஒட்டுமொத்த சந்தை விலையில் இந்த நாடுகளுக்கு கச்சா எண்ணெய் தள்ளுபடியில் விற்கப்படுகிறது. தற்போது இந்தியா, சீனா உட்பட ரஷ்யாவின் தள்ளுபடி விலையில் ஆதாயம் தேடும் நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா குறிவைக்க உள்ளது.

இதனால் ரஷ்யாவின் எண்ணெய் வருவாய் குறையும் என்பதுடன், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றே கூறப்படுகிறது. முன்னதாக G7 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை 2022 இன் பிற்பகுதியில் ரஷ்ய எண்ணெய் மீது 60 டொலர் வரம்பை விதித்தன.

அத்துடன் இந்த விலை வரம்புக்கு மேல் அல்லது குறைவாக விற்பனை செய்யப்படும் ரஷ்ய எண்ணெய் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் மேற்கத்திய கடல்சார் சேவைகளான போக்குவரத்து, காப்பீடு மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான நிதியுதவி ஆகியவற்றை தடை செய்யவும் முடிவானது.

உலகின் முதல் மூன்று எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...