உலகம்
ஆடம்பர Dior கைப்பை…!மனைவிக்காக மன்னிப்பு கோரிய தென் கொரிய ஜனாதிபதி
ஆடம்பர Dior கைப்பை…!மனைவிக்காக மன்னிப்பு கோரிய தென் கொரிய ஜனாதிபதி
தென் கொரிய ஜனாதிபதி தன்னுடைய மனைவியை சுற்றி எழுப்பப்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் தென் கொரியா ஜனாதிபதியின் மனைவி மற்றும் நாட்டின் முதல் பெண்மணியான கிம் கியோன் ஹீ (Kim Keon Hee) 3 மில்லியன் won ($2,200; £1,800) மதிப்பு கொண்ட டியோர் பையை(Dior bag from a pastor) மத போதர் ஒருவரிடம் இருந்து வாங்கியதாக குற்றச்சாட்டு எழுப்பபட்டது.
இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை 2023ம் ஆண்டு பிற்பகுதியில் இடதுசாரி யூடியூப் சேனலான Voice of Seoul வெளியிட்டு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் கிம் கியோன் ஹீ பங்குச் சந்தையிலும் விலை கையாடல்களில் மோசடி செய்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்த தோடு அவர் மீதான குற்றச்சாட்டு சுதந்திரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தன் மனைவி கிம் கியோன் ஹீயை சுற்றி எழுப்பப்பட்டுள்ள ஆடம்பர டியோர் கைப்பை மற்றும் பங்கு கையாளுதல் குற்றச்சாட்டுகளுக்கு தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல்(Yoon Suk Yeol) மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடம் பேசிய தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் தன் மனைவி மீதான சர்ச்சைகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும் நாட்டின் முதல் பெண்மணி தன்னுடைய நடத்தைகளில் சிறப்பாக இருந்து இருக்க வேண்டும், அதே சமயம் தற்போது அவர் மீது சுமத்தப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிரான மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் முதல் பெண்மணியின் கடமைகளை கண்காணிக்க அலுவலகம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார், ஆனால் அவர் மீதான விசாரணை குறித்த கோரிக்கைக்கு எந்தவொரு பதிலையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.