இலங்கை
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் நியமனத்தில் உருவாகியுள்ள சிக்கல்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் நியமனத்தில் உருவாகியுள்ள சிக்கல்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம் தொடர்பான தீர்மானத்தில், பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் தெளிவான வேறுபாடு காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் ஹரினி அமரசூரியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவை தொடர்ந்தும் அந்த பதவியில் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக முன்னதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்திருந்தன.
எவ்வாறாயினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ்மட்ட தொழிற்சங்கங்கள், இந்த நியமனத்தை எதிர்த்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் திடீர் திருப்பமாக, முன்னாள் தலைவர் உடனடியாக இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்தது,
இருப்பினும் அவர் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் தெளிவாக வெளியிடப்படவில்லை.
இது தொடர்பில், அமைச்சர் விஜித ஹேரத் இன்னும் விளக்கமளிக்கவில்லை.
இருப்பினும் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க பதவி விலகியதை அடுத்து, சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.