6 3
உலகம்செய்திகள்

பழி தீர்க்கத் துடிக்கும் ஈரான் – இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

பழி தீர்க்கத் துடிக்கும் ஈரான் – இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இஸ்ரேல் (Israel) மீது நேற்றிரவு சுமார் 400 ஏவுகணைகளை வீசி ஈரான் (Iran) அதிரடியான பதிலடித் தாக்குதலில் இஸ்ரேலின் பல முக்கிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளதாகவும் சுமார் 180 ஏவுகணைகள் ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பின் விளைவுகள் இருக்கும் என இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.

எனினும் தம்மால் ஏவப்பட்ட 90% ஏவுகணைகள் இலக்குகளை சரியாக தாக்கியிருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.  இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் மற்றொரு தாக்குதல் நடைபெறும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.

லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூலை மாதம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கும், பாலத்தீன, லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இஸ்ரேலில் உள்ள இலங்கை (srilanka) பிரஜைகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமால் பண்டார விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

தேவையற்ற பயணங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுங்களுமாறும், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் PIBA வழங்கும் வழிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், அத்தியாவசிய உணவு, மருந்து, தண்ணீர் ஆகியவற்றை அருகில் வைத்துக் கொள்ளுமாறும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...