2 17 scaled
உலகம்

உக்ரைன் அத்துமீறலுக்கு பின்னால் அந்த நாடு தான்: கோபத்தில் கொந்தளித்த ரஷ்ய அரசியல்வாதி

Share

உக்ரைன் அத்துமீறலுக்கு பின்னால் அந்த நாடு தான்: கோபத்தில் கொந்தளித்த ரஷ்ய அரசியல்வாதி

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவசர நிலை பிரகடனம் செய்யும் அளவுக்கு உக்ரைன் ராணுவம் ரஷ்யாவுக்குள் புகுந்து அதிரடி தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

இதுவே ரஷ்ய அரசியல்வாதி ஒருவரை கொந்தளிக்க வைத்துள்ளதுடன், உக்ரைனின் திடீர் பாய்ச்சலுக்கு காரணம் பிரித்தானியா எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரஷ்யாவின் Kursk பிராந்தியத்திலேயே உக்ரைன் ராணுவம் டாங்கிகளுடன் புகுந்து துவம்சம் செய்துள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அங்கே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் தரப்பால் திடீரென்று முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் நிலைகுலைந்த ரஷ்ய அதிகாரிகள் உடனடியாக அவசர நிலை பிரகடனம் செய்துள்ளதுடன், அங்குள்ள பொதுமக்களையும் வெளியேற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையிலேயே மூத்த அரசியல்வாதியும் விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவருமான Adalbi Shkhagoshev உக்ரைனின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், இதுபோன்ற நடவடிக்கைகளின் பின்னால் கட்டாயம் பிரித்தானியாவின் பங்கிருக்கும் என கொந்தளித்துள்ளார்.

உக்ரைனின் இந்த நடவடிக்கை ரஷ்யாவை தூண்டிவிடும் செயல் என்றே ஜனாதிபதி புடின் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பில் ரஷ்ய தளபதி Valery Gerasimov விளக்கமளிக்க கட்டாயப்படுத்தப்பட்டதுடன், ரஷ்ய பிராந்தியத்தின் ஒருபகுதியை இழக்க நேர்ந்ததற்கு பொறுப்பேற்கவும் வைத்துள்ளனர்.

இதனிடையே, உக்ரைன் ராணுவம் முன்னேறுவதை உணர்ந்த விளாடிமிர் புடின், Kursk பிராந்தியத்தில் அமைந்துள்ள அணு உலையை பாதுகாக்க வாக்னர் படையை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான தரவுகளின் அடிப்படையில் Kursk பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவம் சுமார் 20 மைல்கள் தொலைவில் முன்னேறியுள்ளது என்றே கூறப்படுகிறது. Lgov நகரை எட்ட வெறும் 8 மைல்கள் எஞ்சியுள்ளது.

இப்பகுதி Kursk அணுமின் நிலையத்தில் இருந்து 17 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
8
இலங்கைஉலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல்

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது...

Murder Recovered Recovered Recovered 15
உலகம்செய்திகள்

ஈரானின் திடீர் முடிவு.. சர்வதேசத்திடமிருந்து அணுசக்தி தகவல்களை மறைக்க திட்டம்!

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்திற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்...

Murder Recovered Recovered Recovered 11
உலகம்செய்திகள்

தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளான சோமாலிய விமானம் : மூவர் பலி

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

Murder Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

கனடா பெண்ணுக்கு யாழில் நேர்ந்த சோகம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம்(02) உயிரிழந்துள்ளார். கண்டி...