2 33 scaled
உலகம்

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல்: சுவிட்சர்லாந்துக்கு நான்காவது இடம்

Share

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல்: சுவிட்சர்லாந்துக்கு நான்காவது இடம்

2024ஆம் ஆண்டுக்கான, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலில் சுவிட்சர்லாந்து நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.

Henley Passport Index என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.

ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள நாடு, சிங்கப்பூர்.

சிங்கப்பூர் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி, 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதால், பட்டியலில் அந்நாட்டுக்கு முதலிடம்!

இரண்டாவது இடத்தை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ள நாடுகள், ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.

நான்காவது இடத்தை, சுவிட்சர்லாந்துடன் பெல்ஜியம், டென்மார்க், நியூசிலாந்து நோர்வே மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
001
உலகம்செய்திகள்

சட்டம் தன் கடமையைச் செய்யும்! – சகோதரர் ஆண்ட்ரூ கைது குறித்து மன்னர் சார்லஸ் அதிரடி அறிக்கை!

பதவியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தனது தம்பி ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்துப்...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 23 1
செய்திகள்உலகம்

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயற்சி! – இளைஞர் கைது; வெடிமருந்துகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல்!

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் உள்ள நாடாளுமன்ற (US Capitol) வளாகத்திற்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற...

image 1200x800 22 1
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் மராபி எரிமலை வெடிப்பு! – தொடர்ச்சியான நிலநடுக்கங்களால் பீதி; 3 கி.மீ தூரத்திற்குத் தடை!

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மராபி எரிமலை இன்று...