உலகம்
கின்னஸ் சாதனை படைத்த காளை
கின்னஸ் சாதனை படைத்த காளை
உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் கின்னஸ் சாதனைகள் இடம்பெற்றுவரும் நிலையில், உலகின் மிக உயரமான காளை என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்காவில் உள்ள ஒரு காளை படைத்துள்ளது.
அமெரிக்காவின்(America) ஓரிகானில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் வசிக்கும் 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்ட ரோமியோ என பெயரிடப்பட்ட காளை ஒன்றே இந்த சாதனையை படைத்துள்ளது.
கின்னஸ் சாதனை அமைப்பின் அறிக்கைபடி, இதற்கு முன்னர் டாமி என்ற காளை இந்த சாதனையில் இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில், அதைவிட 3 அங்குலம் அதிக உயரத்துடன் தற்போது ரோமியோ காளை புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்த சாதனை குறித்து காளையின் உரிமையாளரான மிஸ்டி மூர் கூறுகையில்,
“ரோமியோ காளைக்கு வாழைப்பழங்கள் மற்றும் ஆப்பிள் மிகவும் பிடிக்கும். தினமும் 45 கிலோ வைக்கோல் மற்றும் தானியங்கள் உட்கொள்கிறது.
இந்த காளையை வளர்ப்பதற்காகவே தற்போது உயரமான தங்குமிட வசதிகள் தேவைப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.