உலகம்
ஈரான் ஜனாதிபதி மரணம் குறித்து இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ள செய்தி
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி மரணமடைந்த நிலையில், அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, ஈரான் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி (63) பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், அவரும், அவருடன் பயணித்த சில அமைச்சர்களும் பலியானார்கள். விடயம் என்னவென்றால், நேற்று நள்ளிரவு 1.00 மணி நிலவரப்படி, இதுவரை ஈரான் அரசு ரைசியின் மரணம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.
இந்நிலையில், இஸ்ரேல் தரப்பு, ஈரான் ஜனாதிபதி மரணத்துக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரேல் அதிகாரி ஒருவர், ஈரான் ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி (63) பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என நேற்று கூறியுள்ளார். அது நாங்கள் அல்ல என அவர் கூறியதாக Reuters பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.