24 664124ca68a78
உலகம்செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தை 29ஆவது முறையாகவும் அடைந்து சாதனை படைத்த நேபாளி

Share

எவரெஸ்ட் சிகரத்தை 29ஆவது முறையாகவும் அடைந்து சாதனை படைத்த நேபாளி

நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா 29ஆவது முறையாகவும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாற்று படைத்துள்ளார்.

நேபாளத்தில் சாகர்மாதா என்று அழைக்கப்படும் எவரெஸ்ட், கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் உயரத்தில் உள்ளது, இது பூமியின் மிக உயரமான மலை சிகரமாகும்.

இந்நிலையில் ‘எவரெஸ்ட் மேன்’ என்று அழைக்கப்படும் 54 வயதான நேபாள மலையேற்ற வீரர் கமி ரீட்டா 29ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

எவரெஸ்ட் மலையடிவாரத்தில் ஷெர்பா சமூகத்தை சேர்ந்தவர் கமி ரீட்டா முதன்முறையாக 1994இல் எவரெஸ்ட் சிகரத்தை தனது 24 வயதில் ஏறி சானை புரிந்துள்ளார்.

கின்னஸ் புத்தகத்தின் படி, ‘எவரெஸ்ட் மேன்’ என்றும் அழைக்கப்படும் கமி ரீட்டா ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில், கொவிட் தொற்றுநோய் காரணமாக நேபாளத்தில் எவரெஸ்டின் தெற்குப் பகுதி ஏறுபவர்களுக்கு மூடப்பட்டு, 2021 இல் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்டது, மே 2021 இல் காமி ரீட்டா தனது 25ஆவது ஆண்டாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து மீண்டும் சாதனை படைத்தார்.

2023 இல், கமி ரீட்டா எவரெஸ்ட் சிகரத்தை 27ஆவது முறையாக ஏறி, சக வழிகாட்டியான பசாங் தாவா ஷெர்பாவுடன் சாதனையை சமன் செய்ததோடு, தொடர்ந்து அந்த ஆண்டு மே மாதமே காமி ரீட்டா தனது 28ஆவது எவரெஸ்ட் ஏறுதலை முடித்ததன் மூலம் குறித்த சாதனையை முறியடித்தார்.

இந்நிலையில், காத்மாண்டுவில் இருந்து ஸ்பிரிங் சீசன் எவரெஸ்ட் பயணத்தை 28 பேர் கொண்ட குழுவுடன் மேற்கொண்ட அவர், உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டின் 71 ஆண்டுகால மலையேறுதல் வரலாற்றில் அதிக அளவில் 29ஆவது முறையாகவும் மே 12ஆம் திகதி காலை ஏறி வராலாற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...