24 663de779e0b15
உலகம்செய்திகள்

கனடா பெண்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்!

Share

கனடா பெண்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்!

கனடாவில் (Canada) மார்பகப் புற்றுநோய் தொடர்பில் பெண்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கனடாவின் அனைத்து மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பெண்கள் மார்பகப் புற்றுநோய் குறித்த பரிசோதனைகளை 40 வயதிலிருந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை கனேடிய புற்றுநோய் அமைப்பு வழங்கியுள்ளது.

கனடாவின் சில மாகாணங்களில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களிடமிருந்து மமாகிராம்ஸ் பரிசோதனை நடத்தப்படுகின்றன.

அத்துடன், கனடாவின் பல பகுதிகளில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், தற்போது மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

கனடா முழுவதிலும் உள்ள பெண்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள சமசந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் அடையாளம் காணுவதன் மூலம் எளிமையான வழிகளில் சிகிச்சை அளிக்கப்பட முடியும் என புற்றுநோய் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Screenshot 2026 02 14 121516
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் ட்ரம்ப் குறித்த விவாதம்: மகளைச் சுட்டுக்கொன்ற தந்தை!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் (Epstein) கோப்புகள் குறித்த அரசியல் விவாதத்திற்குப்...

Airfares to Colombo surge after Pakistan Govt gives go ahead for India T20 World Cup clash
விளையாட்டுசெய்திகள்

கொழும்பில் கால்பதித்தது இந்திய அணி! – கட்டுநாயக்கவில் விசேட பாதுகாப்புடன் உற்சாக வரவேற்பு!

டி20 உலகக் கிண்ணத் தொடரின் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியத் தேசிய கிரிக்கெட் அணி நேற்றிரவு...

1695813008 GAVEL3 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் கடந்த 2008-ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் கொடூரமான படுகொலை தொடர்பான...

Keheliya Family 1200x675px 18 06 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஏப்ரல் 27-ல் விசாரணை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு...