உலகம்
ரஷ்யா – உக்ரைன் போர் – இரகசிய தகவலொன்றை அம்பலப்படுத்திய அமெரிக்கா
ரஷ்யா – உக்ரைன் போர் – இரகசிய தகவலொன்றை அம்பலப்படுத்திய அமெரிக்கா
ரஷ்ய-உக்ரைன் போரை சூடுபடுத்தும் வகையில் அமெரிக்கா ஒரு சிறப்புத் தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ரகசியமாக வழங்கியதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மார்ச் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் அங்கீகரிக்கப்பட்ட $300 மில்லியன் டொலர்கள் (£240m) உதவிப் பொதியின் ஒரு பகுதியாகவும் இந்த ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நீண்ட தூர ஏவுகணைகளின் முதல் தாக்குதல் கிரிமியாவில் உள்ள ரஷ்ய இலக்குகளை ஒரு முறையாவது தாக்கியுள்ளதாக அமெரிக்கா தற்போது வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நீண்ட தூர ஏவுகணைகளில் ஒன்று 300 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை உக்ரைனுக்கான புதிய 61 பில்லியன் டாலர் உதவிப் பொதியில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கையெழுத்திட்டுள்ளார்.