24 6629d6203e821
உலகம்செய்திகள்

காசாவின் வெகுஜன புதைகுழிகள் குறித்து விசாரணைக்கு அழைப்பு

Share

காசாவின் வெகுஜன புதைகுழிகள் குறித்து விசாரணைக்கு அழைப்பு

இஸ்ரேலிய (Israel) துருப்புக்களின் தாக்குதலின் பின்னர், காசாவின் (Gaza) இரண்டு பெரிய மருத்துவமனைகளில் கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழிகள் குறித்து தெளிவான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை (United Nations) அழைப்பு விடுத்துள்ளது.

இந்த விடயத்தில் நம்பகமான புலனாய்வாளர்கள் தளங்களை அணுக வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்,

உண்மைகளை கண்டறிய காசாவில் அதிகமான ஊடகவியலாளர்கள் பணியாற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் (Volker Türk), காசா நகரில் உள்ள ஷிஃபா மருத்துவ மையம் மற்றும் தெற்கு நகரமான கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கண்டு தான் திகிலடைந்துள்ளதாக கூறியிருந்தார்.

மரணங்கள் தொடர்பாக சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்,

அத்துடன், தற்போது நிலவும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் சூழலைக் கருத்தில் கொண்டு இதில் சர்வதேச புலனாய்வாளர்களும் இருக்க வேண்டும் என்று வோல்கர் வலியுறுத்தியுள்ளார்.

போரில் ஈடுபடும் திறன் இல்லாத பொதுமக்கள், கைதிகள் மற்றும் பிறரை வேண்டுமென்றே கொலை செய்வது ஒரு போர்க் குற்றமாகும் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறை பேச்சாளர் வேதாந்த் படேல், வெகுஜன புதைகுழிகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் தகவல் கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...