24 660ce9f575455
உலகம்செய்திகள்

மைசூரு மன்னருக்கு சொந்தமாக வீடு இல்லையா! அரண்மனை யாருக்கு சொந்தம்?

Share

மைசூரு மன்னருக்கு சொந்தமாக வீடு இல்லையா! அரண்மனை யாருக்கு சொந்தம்?

பாஜக சார்பில் போட்டியிடும் மைசூரு மகாராஜா சொந்தமாக வீடு என்று கூறிய நிலையில், அரண்மனை யாருக்கு சொந்தம் என்று காங்கிரஸ் வேட்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் மைசூரு குடகு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மைசூரு மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த உடையார் (32) போட்டியிடுகிறார்.

இவர் வேட்புமனு தாக்கல் செய்த போது தனது பிராமண பத்திரத்தில், தனக்கு ரூ.4 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 303 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும், மனைவி திரிஷிகா குமாரியிடம் ரூ.1.4 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், மகன் ஆத்வீரிடம் ரூ.3.63 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன்னிடம் 3.4 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி இருப்பதாகவும், மனைவியிடம் ரூ. 1.02 கோடி மதிப்பிலான நகைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதோடு, தனது பெயரில் 1.36 கோடி மதிப்பிலான முதலீட்டு பத்திரங்கள், வங்கி கணக்கில் ரூ. 1 லட்சம் பணம் உள்ளது என்று கூறியுள்ளார். குறிப்பாக அவர் தனக்கு சொந்தமாக கார், வீடு மற்றும் நிலம் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமணா கூறுகையில், “தேர்தல் வருவதற்கு முன்பாகவே மைசூரு மகாராஜா பொய் சொல்ல ஆரம்பித்து விட்டார். அவரிடம் சொந்தமாக கார், வீடு இல்லை என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

மைசூரு,பெங்களூரு, ஊட்டி உள்ளிட்ட ஊர்களில் அரண்மனைகளில் தான் வசிக்கிறார். அப்படியானால் அந்த அரண்மனை யாருக்கு சொந்தம்.

எத்தனை வெளிநாட்டு கார்களை பயன்படுத்துகிறார் என அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் பொய்யான தகவல்களை பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 18 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முடங்கும் சுகாதாரத் துறை? – தரவுகளைப் புறக்கணிக்க மருத்துவர்கள் சங்கம் முடிவு; நாளை முதல் போராட்டம் தீவிரம்!

தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய எழுத்துப்பூர்வ உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகக் கூறி, நாளை (18) முதல்...

image 1200x800 19
செய்திகள்இலங்கை

சபரிமலை வழக்கு: ஏப்ரல் 7 முதல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை! – சட்டப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பை எதிர்த்துத்...

image 1200x800 31
செய்திகள்உலகம்

பிரித்தானியாவின் புதிய பயண விதிகளால் பெண்களுக்குச் சிக்கல்! – பெயர்ப் பொருத்தமின்மை பாரபட்சமாக அமைவதாகக் குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் எதிர்வரும் பிப்ரவரி 25 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன....

image 1200x800 17 1
செய்திகள்உலகம்

விண்ணில் தோன்றும் நெருப்பு வளையம்! – 2026-இன் முதல் சூரிய கிரகணம் இன்று; எங்கே காணலாம்?

2026-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (17) செவ்வாய்க்கிழமை நிகழ்கிறது. இது ஒரு ‘வளைய...