உலகம்செய்திகள்

திவாலான நிலையிலும் ரூ.5000 கோடி சொகுசு வீட்டில் வாழும் அனில் அம்பானி

Share
24 660c457e3f0e7
Share

திவாலான நிலையிலும் ரூ.5000 கோடி சொகுசு வீட்டில் வாழும் அனில் அம்பானி

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி, இந்தியாவின் மிகவும் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவர்.

மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானியின் இளைய மகன் மற்றும் இந்தியா மற்றும் ஆசியாவிலேயே பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் ஆவார்.

தந்தை திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு, சகோதரர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். முகேஷ் அம்பானி வணிகத்தில் உயர்ந்தார், அனில் அம்பானி பல இன்னல்களை சந்தித்தார்.

திவாலானதாக அறிவிக்கப்பட்ட பிறகு, அனில் அம்பானி பல சவால்களை தாண்டி சில வருடங்களாக குடும்பத்துடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மனைவி டினா அம்பானி மற்றும் இரண்டு மகன்களுடன் ஆடம்பரமான பங்களாவில் வசிக்கிறார்.

அனில் அம்பானி மற்றும் டினா அம்பானியின் மூத்த மகன் ஜெய் அன்மோல, கிரிஷா ஷாவை 20 பிப்ரவரி 2022 அன்று திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, அனில் அம்பானியின் ஐந்து பேர் கொண்ட குடும்பம் மும்பையில் அவரது தாயார் கோகிலாபென் அம்பானியுடன் ஒரு ஆடம்பரமான வீட்டில் நிம்மதியாக வாழ்கிறது.

இது 17 மாடிகள் கொண்ட சொகுசு வீடு. இந்த வீடு 16,000 சதுர அடியில் பரவியுள்ளது. இது மும்பையின் மிகவும் ஆடம்பரமான சொத்துக்களில் ஒன்றாகும்.

அனில் அம்பானியின் இந்த ஆடம்பர வீடு மும்பை Pali Hill-ல் அமைந்துள்ளது.

இந்த சொகுசு இல்லம் 66 மீட்டர் உயரம் கொண்டது. அதை 150 மீட்டராக உயர்த்த அனில் அம்பானி விரும்பினார். ஆனால் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற முடியவில்லை.

இது தவிர அனில் அம்பானியின் சொகுசு வீட்டில் ஹெலிபேட், லவுஞ்ச் ஏரியா மற்றும் பாரிய வாகன நிறுத்துமிடம் உள்ளது.

அனில் அம்பானியின் வீட்டின் படங்கள் அதிகம் சமூக வலைதளங்களில் இல்லை என்றாலும், அவரது மனைவி டினா அம்பானியின் இன்ஸ்டாகிராம் ஹேண்டில் உள்ள புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.

அனில் அம்பானியின் கேரேஜ் இந்தியாவின் விலை உயர்ந்த கார்களால் நிரப்பப்பட்டுள்ளது. தகவல்களின்படி, Porsche, Audi Q7, Mercedes GLK 350, Lexus XUV மற்றும் Rolls Royce போன்ற ஆடம்பர கார்கள் அனில் அம்பானியின் கேரேஜில் நிறுத்தப்பட்டுள்ளன.

பல ஊடக அறிக்கைகளின்படி, மும்பை பாலி ஹில்ஸில் உள்ள அனில் அம்பானியின் சொகுசு வீட்டின் மதிப்பு ரூ.5000 கோடி.

ஆம், பல வணிகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும், அனில் அம்பானி மும்பையில் மிகவும் விலையுயர்ந்த சில சொத்துக்களை வைத்திருக்கிறார்.

அனில் அம்பானியின் மூத்த சகோதரர் முகேஷ் அம்பானியின் வீடு ஆன்டிலியாவுடன் (Antilia) ஒப்பிடும்போது இது மிகவும் சிறியது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...